நம் அன்றாட வாழ்வில் ஊக்கமென்பது மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய ஊக்கத்தை உங்களின் அன்பிற்குரியர்களுக்கு வழங்க இந்த பகுதியில் பல்வேறு ஊக்கமளிக்கும் பொன்மொழிகளடங்கிய படங்களைக் கொடுத்துள்ளோம். இந்த பொன்மொழிகள் மற்றும் குறுஞ்செய்திகளை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் ஊக்குவித்து மகிழுங்கள்.
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. - Dr. David Schwartz
Feel free to motivate all your Tamil friends with these Motivational Tamil Quotes Images. Just download and send these pictures and ecards to them via messenger or mail to motivate them in an awesome way. You can download any number of quotes and messages from here for non-commercial purposes.
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.