English

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள், தத்துவங்கள்

சுவாமி விவேகானந்தர் அவர்கள் மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்தார். அத்தகைய மாமனிதரின் சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள், தத்துவங்கள் அடங்கிய படங்களை இந்த தொகுப்பில் கொடுத்துள்ளோம். இந்த இமேஜ்களை முகநூல் மூலம் பகிர்ந்து அவரின் கருத்துக்களை உலகறியச்செய்யுங்கள்.

  வேதாந்தத்தின் மிக உன்னதமான ரகசியங்களை மேலை நாடுகளுக்கு உபதேசிப்பதன் மூலம் அந்த மகத்தான நாடுகளின் அனுதாபத்தையும் மதிப்பையும் பெற்று, நாம் அவர்களுக்கு என்றென்றும் ஆன்மீக குருவாக இருப்போம். . இதை மறந்து என்றைக்கும் நம் நாட்டினர் ஆன்மீகத்தை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, மதத்தைக் கற்பதற்காக அவர்கள் காலடியில் அமர்கிறார்களோ அன்றைக்கு, ஏற்கனவே சீரழிந்துள்ள இந்த நாடு, என்றென்றைக்குமாக அழிந்து நாசமாகி விடும்
  "

  எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள் எல்லா தேவைகளையும் துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொரு வரிடமும் இருக்கிறது இதை நம்புங்கள் அந்த ஆற்றல் வெளிப்படும் என்று எல்லோரிடமும் சென்று பிரச்சாரம் செய்யுள்கள் அதோடு பாமர மக்களிடையே விஞ்ஞானம் தத்துவம் வரலாறு புவியியல் இவற்றின் மையக் கருத்துக்களை எளிய மொழியில் பரப்புங்கள்.
  "

  திருமணமாகாத இளைஞர்களைக் கொண்டு ஓர் இயக்கத்தைத் தொடங்க நான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். முதலில் அவர்களுக்குப் போதனை செய்வேன் பிறகு அவர்களின் மூலம் பணி செய்வேன்.
  "

  The section of this page is filled with the best collection of quotes and ideologies of Swami Vivekananda. Just download an image from this collection every day and use it in your status to give some motivation to everyone in your contact.

  எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பவனால் எந்தக் காரியமும்செய்ய முடியாது. உண்மையானது, நல்லது என்று நீ எதனைப் புரிந்துகொண்டாயோ அதனை உடனே நிறைவேற்று எதிர்காலத்தில் இது வருமா இது வராமல் போகுமா என்று கணக்குப் பார்ப்பதில் என்ன பயன் ?
  "

  கடவுள் ஒருவர் தான் பலன்களைத் தருபவர் அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப் போகிறாய்? அந்த வழியைப்பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்துகொண்டே இரு.
  "

  ஒவ்வொருவரும் ஆன்ம அனுபூதி பெறும் ஒரு காலம் வரவே செய்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் பிரம்மம். உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடுகள் எல்லாம் அதன் வெளிப்பாட்டின் அளவிலுள்ள வேற்றுமையே. காலம் வரும்போது ஒவ்வொருவரிடமும் அது பூரணமாக வெளிப்படுகிறது.
  "

  ஆன்மா சூரியனைப்போல் எப்போதும் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறது. அறியாமை என்னும் மேகம் அதை மறைத்துக் கொண்டிருக்கிறது,அவ்வளவுதான். மேகத்தை விலக்குங்கள். சூரியன் வெளிப்படும்.
  "

  மிக அதிக அளவில் ரஜோ குணத்தை வளர்ச்சி யடையச் செய்யாமல் இந்த உலகத்திலோ மறு உலகத்திலோ உங்களுக்கு எதுவும் கிடைக்காது. இந்தநாடு முழுவதுமே ஆழ்ந்த தமோ குணத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

  பரந்த இதயமும் ஆற்றலும் நிறைந்த சில இளைஞர்கள் எனக்குக் கிடைப்பார்களானால் நான் இந்த நாடு முழுவதையுமே ஒரு கலக்கு கலக்கி விடுவேன். அத்தகைய சிலர் சென்னையில் இருக்கிறார்கள்.

  Send Quote To Your Friend