English

அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

'அன்னை தெரசா' என்றழைக்கும் பொழுதே 'அன்னை' எனும் சொல்லுடன் சேர்த்துதான் அழைக்கின்றோம். அந்தளவுக்கு நம் மனதில் வாழும் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம். அத்தகைய சிறந்த அன்னையின் பொன்மொழிகளடங்கிய படங்களை இந்த தொகுப்பில் கொடுத்துள்ளோம். இப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்..
    "

    அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது, செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு..
    "

    இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்!!!
    "

    மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்
    "

    Here we have gathered some great collection of Mother Teresa Quotes in Tamil which are easy to download and share via messenger platforms. All these quotes will insist you about the importance of serving to the humanity. Enjoy sharing these pics with your loved ones.

    உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி..
    "

    வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்..
    "

    நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

    கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை..

    கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது.

    எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது.

    பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால், சேவை செய்து பாருங்கள்! கடவுளே உங்கள் அருகில் வருவார்!

    உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை! -அன்னை தெரசா

    நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து

    கொள்வது அவசியம்.

    இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

    அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

    Send Quote To Your Friend